சினிமா

8ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

8ம் தேதி நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம்

webteam

தென்னிந்திய  நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்  வருகிற 8-ம்தேதி ஞாயிறு மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா சாலையிலுள்ள காமராஜர் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பு சங்கத்தின் சார்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கபட்டுள்ளது. 


இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் சங்க உறுப்பினர்களான முன்னணி நடிகர் நடிகைகள் மூத்த நாடக மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகள் கலந்து கொள்கின்றனர். நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்துகிறார். துணை தலைவர் கருணாஸ் 2016-2017-ம் ஆண்டுக்கான  ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு,செலவு கணக்குகளை வாசித்து ஒப்புதல் பெற இருக்கிறார். பொருளாளர் கார்த்தி எதிர்கால பொருளாதார திட்டமிடல் பற்றிய விளக்க உரை  நிகழ்த்துகிறார். பொதுச் செயலாளர் விஷால் சங்கத்தின் கடந்த கால செயல்படுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விளக்கி கூட்டத்தில் ஒப்புதல் பெற இருக்கிறார். 


அதனை தொடர்ந்து தலைவர் நாசர் தலைமை உரையாற்றுவார். துணை தலைவர் பொன்வண்ணனின் நன்றி உரையுடன் பொதுக்குழு கூட்டம் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.