’துமாரி சுலு’ இயக்குனரின் இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார், ’சகுனி’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த பிரணீதா!
தமிழில், உதயன், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய படங்களில் நடித்தவர் கன்னட நடி கை பிரணீதா சுபாஷ். இவர் இப்போது இந்தி இசை ஆல்பத்தில் நடித்து வருகிறார். ’சான் கித்தான்’ என்ற இந்த ஆல்பத்தை இந்தியில் சூப்பர் ஹிட்டான ’துமாரி சுலு’ படத்தின் இயக்குனர் சுரேஷ் திரிவேணி இயக்குகிறார். இந்தப் படம் தமிழில் ’காற்றின் மொழி’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் ஜோதிகா நடிக்கிறார்.
’சான் கித்தான்’ ஆல்பத்தில் இந்தி நடிகர் ஆயுஷ்மன் குர்ரானா போலீஸ் அதிகாரியாக வருகிறார். அவர் காதலியாக பிரணீதா நடிக்கிறார். ‘இவ ர்கள் கெமிஸ்ட்ரி புதுமையாகவும் பிரெஷ்சாகவும் இருக்கும். குளுகுளு பிரதேசங்களில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. இந்த ஆல்பத்துக்காக கடுமையாக உழைத்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் திரிவேணி.