சினிமா

தனுஷுக்கு நன்றி சொன்ன சவுந்தர்யா

தனுஷுக்கு நன்றி சொன்ன சவுந்தர்யா

webteam

வேலை இல்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த், அதில் நடித்துள்ள தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷ், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் உட்பட பலர் நடித்த படம், ’வேலையில்லா பட்டதாரி’. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், ’வேலையில்லா பட்டதாரி 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. தனுஷ், அமலா பால், இந்தி ஹீரோயின் கஜோல், விவேக் உட்பட பலர் நடிக்கின்றனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்த் அங்கு திடீர் விசிட் அடித்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ், ’தலைவர் (ரஜினி) ஆசியுடன் படப்பிடிப்பு முடிவடைந்தது’என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சவுந்தர்யா ரஜினி, ‘நன்றி தனுஷ் சார். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன், கற்றுவருகிறேன்’என்று கூறியுள்ளார்.