சினிமா

கஜோல் நீலாம்பரியா, விஜயசாந்தியா? சவுந்தர்யா விளக்கம்!

கஜோல் நீலாம்பரியா, விஜயசாந்தியா? சவுந்தர்யா விளக்கம்!

webteam

’விஐபி 2’ படத்தில் கஜோல் நடித்துள்ள கேரக்டர் பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்த் விளக்கியுள்ளார்.

தனுஷ், கஜோல், அமலா பால், விவேக், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘விஐபி 2’. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. 

இதில் கஜோல் கேரக்டர் பற்றி சவுந்தர்யா கூறும்போது, ‘கடந்த 20 வருடமாக கஜோல் ஏன் தமிழில் நடிக்கவில்லை என்று தெரியவில்லை. இந்தப் படத்தில் வசுந்தரா பரமேஸ்வரன் என்ற கேரக்டரில் அவர் நடிக்கிறார். அந்தக் கேரக்டருக்கு பிரமாதமாக உயிர் கொடுத்திருக்கிறார். ’மன்னன்’ படத்தின் விஜயசாந்தியையும் ’படையப்பா’வின் நீலாம்பரியையும் கஜோலுடன் ஒப்பிட்டு கேட்கிறார்கள். ஆண்-பெண் மோதல் என்ற கான்செப்ட் என்றாலே இந்த கேரக்டர்கள் ஞாபத்துக்கு வந்துவிடும் என்பது உண்மைதான். ஆனால், இந்தப் படம் அதே போன்ற லைனை கொண்டதுதான் என்றாலும் அந்த படங்களின் சாயல் இதில் இருக்காது’ என்றார் சவுந்தர்யா ரஜினி.