சினிமா

சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்தது தடையில்லாசான்று - விரைவில் அறிவிக்கப்படுமா தேதி?

சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்தது தடையில்லாசான்று - விரைவில் அறிவிக்கப்படுமா தேதி?

Veeramani

சூர்யா நடிக்கும் சூரரைபோற்று திரைபடத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெற்றுள்ளதாக 2டி எண்டர்டெயின்மெண்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில்” சூரரைப்போற்று படத்திற்கு நாங்கள் தடையில்லா சான்று பெற்றோம். புதிய ரிலீஸ் தேதி மற்றும் கூடுதல் தகவல்களுக்கு தயாராக இருங்கள்” என தெரிவித்துள்ளார். தீபாவளிக்கும் இத்திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.