சினிமா

சினிமா ஷூட்டிங்கிலும் பொதுமக்களை சந்தித்து உதவி செய்யும் சோனு சூட்!

sharpana

ஹைதராபாத்தில் சினிமா ஷூட்டிங்கில் உள்ள சோனு சூட் தன்னிடம்  உதவிக்கேட்டு வரும் பொதுமக்களை சந்தித்து உதவி வருவது, மேலும் பாராட்டுக்களைக் குவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் 22 முதல் ஊரடங்கு அமலபடுத்தப்பட்டதால், சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். சிறப்பு பேருந்துகள் மூலம் அவர்களை ஊருக்கு அனுப்பி பேருதவியை செய்தார் சோனு சூட். அதோடு, வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மாணவர்களையும் விமானச் செலவை ஏற்றுக்கொண்டு இந்தியா அழைத்து வந்தார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னிடம் கோரிக்கை வைப்பவர்களுக்கும் உதவி வருகிறார். இதனால், இந்தியா முழுக்க சோனு சூட்டுக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். வில்லன் நடிகரான சோனு சூட் நிஜ ஹீரோ என்று போற்றப்படுகிறார்.

சமீபத்தில் சினிமா ஷுட்டிங் நடத்த விதிமுறைகள் தளத்தப்பட்டுள்ளதால், பல மாநிலங்களில் ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான், தற்போது சோனு சூட் தெலுங்கு படத்தில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இத்தனைநாள் சமூக வலைதளங்கள் வழியாக உதவி வந்தவர், தற்போது ஷூட்டிங்கிலும் தன்னை தேடி வரும் பொது மக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டு உதவுகிறார்.

சோனு சூட்டை சந்திப்பதற்காக 100 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து வந்து உதவிகேட்கிறார்கள். இத்தனை கிலோ மீட்டர் பயணம் செய்து உதவி கேட்க வரும அவர்களின் துயரம் எத்தகையது? என்பதை உணர்ந்து அன்போடு ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மக்களை சந்தித்து உதவிக்கான ஏற்பாடுகளை உதவுகிறார். இந்த வீடியோவை ரமேஷ் பாலா என்ற தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு சோனு சூட் நன்றியும் தெரிவித்திருக்கிறார்.