சினிமா

அனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு!

அனுமதி இன்றி தங்கும் விடுதி: வில்லன் நடிகருக்கு எதிராக வழக்கு!

webteam

முறையான அனுமதி இன்றி தங்கும் விடுதி மற்றும் உணவகம் நடத்தி வரும் நடிகர் சோனு சூட்டுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

பிரபல இந்தி நடிகர் சோனு சூட். இவர், தமிழில் ’கள்ளழகர்’, ’கோவில்பட்டி வீரலட்சுமி’, ’சந்திர முகி’,’அருந்ததி’, ’ஒஸ்தி’, ’சாகசம்’, ‘தேவி’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்துள்ள இவர், மும்பை ஜூஹூ பகுதியில் குடியிருப்பு பகுதியில் உணவகம் மற்றும் தங்கும் விடுதியை நடத்தி வருகிறார்.

7 மாடியை கொண்ட இந்த தங்கும் விடுதியில் 23 அறைகள் உள்ளன. லவ் அண்ட் லட் (Love and Latte) என்று பெயரை கொண்ட இது, குடியிருப்பு பகுதியில் இருக்கிறது. இதற்கான அனுமதியை மும்பை மாநகராட்சியிடம் அவர் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் முறைப்படி அனுமதிக்கு விண்ணப்பித்தாராம். ஆனால், குடியிருப்பு பகுதியில் அதைக் கட்ட மும்பை மாநகராட்சி அலுவலகம் அனுமதி மறுத்துவிட்டது. இருந்தாலும் அதை மீறி அங்கு உணவகம் மற்றும் தங்கும் விடுதியை அவர் நடத்தி வருகிறார் என்று அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் புகார் கூறினர்.

சமூக ஆர்வலர்கள் சிலர் இதுதொடர்பாக மாநகராட்சிக்கும் புகார் மனுக்களை அனுப்பினர். இதையடுத்து நடிகர் சோனு சூட் மீது வழக்கு தாக்கல் செய்ய மாநகராட்சி அலுவலகம் முடிவு செய்துள் ளது. இதை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சோனு சூட் கூறும்போது, ‘’முறையான அனுமதியோடுதான் இது நடத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சியிடம் இருந்து, நடவடிக்கை தொடர்பான எந்த தகவலும் இதுவரை வரவில்லை’’ என்றார்.