சினிமா

”உதவி கிடைக்காதவனாக உணர்கிறேன்” - ட்விட்டரில் உடைந்த நடிகர் சோனு சூட்

webteam

தன்னிடம் உதவி கேட்ட நபர்களை காப்பாற்ற முடியாததால், உதவி கிடைக்காதவனாக உணர்வதாக நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “ நீங்கள் காப்பற்ற நினைத்த ஒருவர் உயிர்விடுகிறார். இந்த இழப்பு உங்கள் நெருங்கியவர்கள் இறப்பை விட ஒன்றும் குறைவானதல்ல. நான் காப்பாற்றி விடுகிறேன் என்று உறுதியளித்த குடும்பம் ஒன்று அவர்களில் ஒருவரை இழந்து நிற்கிறது. அவர்களை எதிர்கொள்ள எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. இன்று நான் சிலரை இழந்திருக்கிறேன். தினமும் 10 முறைக்கு மேல் தொடர்பில் இருந்த குடும்பம் இனி தொடர்பு கொள்ளப்போவதில்லை. உதவி கிடைக்காதவனாக உணர்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கொரோனா 1-வது அலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட் பலருக்கு உதவிக்கரம் நீட்டினார். அதனைத்தொடர்ந்து பலரும் அவரிடம் சமூகவலைதளங்கள் மூலம் உதவி கேட்டு வருகின்றனர். உதவுவதற்காகவே அவர் ஒரு தனி மொபைல் எண்ணையும், ஆப்பையும் உருவாக்கினார். கொரோனா 2-வது அலையிலும், படுக்கை வசதி மற்றும் வென்டிலேட்டர் கிடைக்காமல், மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நாக்பூரை சேர்ந்த 25 வயது கைலாஷ் அகர்வால் என்ற பெண்ணை, கொரோனா சிகிச்சைக்காக நாக்பூரிலிருந்து ஹைதராபாத் தனியார் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வர உதவினார். தொடர்ந்து கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் அவர் உதவி செய்து வருகிறார். இந்த நிலையில் அதில் சிலர் இறந்ததாகத் தெரிகிறது. அதனைத்தொடர்ந்து அவர் இவ்வாறான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் அவரை ஆறுதல் படுத்தி வருகின்றனர்.