சினிமா

உத்ராகண்ட் வெள்ளத்தில் தந்தையை இழந்த நான்கு மகள்களை தத்தெடுத்த சோனு சூட்!

sharpana

உத்ராகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவரின் நான்கு மகள்களை நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார்

சோனு சூட் என்ற வில்லன் நடிகரை ரியல் ஹீரோவாக காட்டியது, கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர் செய்த பேருதவிகள். இப்போதுவரை, தனது சமூக வலைதளங்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு மருத்துவ உதவிகள், கல்விக்கான உதவிகள் என்று தனது கரங்களை நீட்டி வருகிறார்.

சமீபத்தில் உத்ராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் தப்போவன் ஹைட்ரோபவர் திட்டத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்த ஆலம் சிங் புண்டிர் என்பவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். அவரின் வருமானமே குடும்பத்தைக் காப்பாற்றி வந்து நிலையில் திடீர் பேரிழப்பால் மனைவி உட்பட நான்கு பெண் குழந்தைகளும் பரிதவித்து போயினர்.

இந்நிலையில்தான், சோனுசூட்டிடம் சமூக வலைதளங்களில் வைத்த கோரிக்கையை ஏற்று உயிரிழந்த ஆலம் சிங்கின் அஞ்சல், அந்தரா,காஜல், அனன்யா ஆகிய நான்கு பெண் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றதோடு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக சோனு சூட் அறிவித்திருக்கிறார்.இதுகுறித்து, சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இனி இந்தக் குடும்பம் என்னுடையது’ என்று பதிவிட்டுள்ளார்.