சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா காட்சிகள் நிறைவடைந்துள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.
‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியும் நடிக்கிறார். இந்த நிலையில், ‘டான்’ படத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யாவின் காட்சிகள் நிறைவடைந்துள்ளதாக படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உற்சாகமுடன் ஒரு செல்ஃபி போட்டோவை பகிர்ந்து தெரிவித்திருக்கிறார்.