கன்னட திரைப்பட நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 62 வயதான சிவராஜ்குமார், சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பைரதி ரங்கல் பட வெற்றிவிழாவில் தனது உடல்நிலையை
கருத்தில் கொண்டு, அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை
மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டது.
இச்சூழலில், அமெரிக்காவின் மியாமி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக, சிவராஜ்குமார் நேற்றுமுன் தினம் சென்றார். அவருக்கு வரும் 24ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.