ஆகஸ்ட் 24ம் தேதி அஜித் நடித்த விவேகம் படம் வெளியாகும் திரையரங்குகளில் வேலைக்காரன் டீசர் வெளியாக இருக்கிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் டீசர் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அஜித் நடித்துள்ள விவேகம் படம் ரிலீசாகும் திரையரங்குகளில் 24ம் தேதி முதல் வேலைக்காரன் படத்தின் டீசரும் வெளியாக இருக்கிறது.
இதுகுறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அப்படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
அதில், ‘அஜித் நடித்த விவேகம் 24ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. அதே போல் அன்று முதல் விவேகம் வெளியாகும் தியேட்டர்களில் வேலைக்காரன் படத்தின் டீசரும் வெளியாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.