ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘குப்பத்து ராஜா’ டீசரை சிவகார்த்திகேயன் நாளை வெளியிடுகிறார்.
நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் 'குப்பத்து ராஜா'. இதில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி, எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு என பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சென்னையில் இப்படத்திற்காக குப்பம் செட் போடப்பட்டு பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதில் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். அன்பறிவு மற்றும் திலீப் சுப்புராயன் ஸ்டெண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளனர். இதன் முழு படப்பிடிப்பு முடிந்துள்ளது. இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாளை மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ‘குப்பத்து ராஜா’வின் டீசரை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.