பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் 55 சதவீதம் முடிந்தது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு பொன்ராம்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் மிக சைலண்ட்டாக இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தது. தென்காசியில் நடந்த படப்பிடிப்பில் நடிகை சமந்தா கலந்து கொண்டார்.
சிவாவின் ‘வேலைக்காரன்’ வெளியிட்டு வேலைகள் மும்முரமாக நடந்து வருவதால் பொன்ராம் படத்தை பற்றிய தகவல்களை கசிய விடாமல் கவனித்துக் கொண்டது படக்குழு. சில நாட்களுக்கு முன்பு வேலைக்காரன் ஃபேர்வல் டே முடிவடைந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிகாரிப்பூர்வமான செய்தியை வெளியிட்டு உள்ளது.
அதில், ”மகிழ்ச்சியான அறிவிப்பு. எங்களின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது. ஏற்கெனவே 55 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். படத்தை வரும் பிப்ரவரியில் திரையிட உள்ளோம்” என்று அறிவித்திருக்கிறார்கள்.