நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தனது மகள் ஆராதனாவுடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என்றும், அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், அதேபோல் தனது பெஸ்ட் ஃபிரெண்டின் படத்தைப் பகிர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஆராதனா என்ற மகளும் உள்ளனர். பொதுவாக சிவகார்த்திகேயன் தனது பர்சனல் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளமாட்டார். ஆனால், இன்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது அவருடைய நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது நயன்தாராவுடன் இணைந்து வேலைக்காரன் படத்திலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படத்திலும் நடித்துவருகின்றார்.