சினிமா

ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’!

sharpana

சட்டமன்றத் தேர்தலையொட்டி சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்த படக்குழு தற்போது புதிய தேதியை அறிவித்திருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் – பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தை, ’கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘தளபதி 65’ படத்தினையும் நெல்சன் இயக்கவிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோடு விஜய் ரசிகர்களும் ஏகப்பட்ட எதிர்பார்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ‘டாக்டர்’ வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அனிருத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பாளராக கலை அரசு படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின், ‘செல்லம்மா செல்லம்மா’, ‘So Baby’ என  இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆனால், தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருப்பதால், அதையே காரணம் காட்டி படக்குழு ‘டாக்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. விரைவில் புதிய வெளியீட்டு தேதியை அறிவிப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள். 

இந்நிலையில், டாக்டர் படம் ரம்ஜான் பண்டிகை அன்று வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. ரம்ஜான் பண்டிகை வரும் மே 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.