சிவாஜி மணிமண்டபத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன், சிவாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
சென்னை அடையாரில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை, சமீபத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து நடிகர்களும், பொதுமக்களும் சிவாஜி மணிமண்டபத்தை நாள்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று சிவாஜி மண்டபத்திற்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன், சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.