சினிமா

100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

sharpana

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஹீரோ’ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். கடந்த 27 ஆம் தேதி கேரளாவிலும் டாக்டர் வெளியிடப்பட்டது. அங்கும் தற்போது ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வெளியான இரண்டே நாளில் 66 லட்சம் வசூலைக் குவித்துள்ளது.

இந்த நிலையில், ‘டாக்டர்’ உலகம் முழுக்க வசூலில் 100 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றும் தற்போதுவரை 96 கோடி ரூபாய் உலகம் முழுக்க வசூல் செய்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே 68 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.