சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் அனு என்கிற வெள்ளைப்புலிக்குட்டியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.
வன விலங்குகளை பாதுகாக்கும் வகையில் விலங்குகளை தத்தெடுத்து அவற்றுக்கான பராமரிப்பு செலவுகளை ஏற்கும் வகையிலான திட்டம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வந்த சிவகார்த்திகேயன், வெள்ளைப் புலிக்குட்டி அனுவை தத்தெடுத்து அதன் 6 மாதங்களுக்கான பராமரிப்பு தொகையை அதிகாரிகளிடம் வழங்கினார்.