ஆர்.டி.ராஜா தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயனின் 33 - வது பிறந்த நாளையொட்டி, அவரது 12 ஆவது படத்தின் டைட்டிலாக சீமராஜா என வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று நள்ளிரவு இணையதளங்களில் வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இதில் சிவாவுக்கு ஜோடியாக சமந்தா முதல் முறையாக இணைகிறார். பொன்ராஜ் சிவகார்த்திகேயனை இயக்கும் இந்த மூன்றாவது படத்தில் வழக்கம்போல சூரியும் இடம்பெற்றுள்ளார்.
சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்தே பயணிக்கும் குதிரையின் மேல் எஸ்.கே. அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் வெளிவந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.