சினிமா

என் ஃபேவரைட் மலேசியா: மோகன் ராஜா ஜில்!

என் ஃபேவரைட் மலேசியா: மோகன் ராஜா ஜில்!

Rasus

சிவகார்த்திக்யேன், நயன்தாரா, மலையாள நடிகர் பஹத் பாசில், விஜய் வசந்த், சினேகா உட்பட பலர் நடிக்கும் படம், ‘வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்துவந்தது. இப்போது அங்கு ஷூட்டிங் முடிந்துவிட்டதாக மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர், ‘எனக்குப் பிடித்த மலேசியாவில் எனது மூன்றாவது படத்தின் ஷூட்டிங் இது. இன்றோடு படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. மலேசிய தமிழர்களின் அன்புக்கும் வரவேற்புக்கும் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே, எம்.குமரன் s/o மகாலட்சுமி, தில்லாலங்கடி படங்களை மலேசியாவில் இயக்கி இருந்தார்.

ஷூட்டிங் முடிந்ததை அடுத்து படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் அங்குள்ள தமிழர்களை சந்தித்து சந்தித்து உரையாடினார். அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதுபற்றி அவர், ‘இந்த ஷெட்யூல் முடிந்துவிட்டது. நன்றி மலேசியா, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.