சினிமா

தமிழ் உள்பட நான்கு மொழிகளில் ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

தமிழ் உள்பட நான்கு மொழிகளில் ஓடிடியில் வெளியானது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

sharpana

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ ஓடிடியில் வெளியாகியுள்ளது.

ஹீரோ’ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடியது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள்.

இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ‘டாக்டர்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பர்றியிருந்தது.அதனையொட்டி, தீபாவளியை முன்னிட்டு நேற்று மாலை ஒளிபரப்பானது. இந்த நிலையில், ‘டாக்டர்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியிருந்தது. அதன் அடிப்படையில், இன்று ‘டாக்டர்’ தமிழ், கன்னடம், மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதனை நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.