‘விசுவாசம்’ படத்தின் இரண்டு பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக அஜித்தின் படங்கள் படப்பிடிப்பு முடியும் வரை படத்தின் தலைப்பும் அது வெளியாக உள்ள தேதி ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். அது ஒரு ட்ரெண்ட் ஆகவே கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறையை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே ‘விசுவாசம்’ என படத்தின் தலைப்பை வெளியிட்டு அதிர்ச்சி தந்தார் இயக்குநர் சிவா. படம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் முன்கூட்டியே அறிவித்தார். ஆனால் அறிவித்ததைபோல இதன் ஷூட்டிங் தொடங்கவில்லை. சில மாதங்கள் தள்ளிப்போனது.
கடந்த மே மாதம் ஹைதராபாத்தில் அஜித் படத்திற்காக அழகான கிராம செட் போடப்பட்டது. அதில் பங்கேற்பதற்காக அஜித் ஹைதராபாத் சென்றார். இவரது பயணத்தின் போது தற்செயலாக சந்தித்த இசையமைப்பாளர் தமன் அஜித்துடன் இணைந்து எடுத்துக் கொண்டார். அப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அது பரபரப்பானது.
இந்நிலையில் ஹைராபாத்தில் நடைபெற்று வரும் அஜித்தின் ‘விசுவாசம்’ முதற்கட்ட படப்பிடிப்பில் இருந்து அஜித்தும் நயன்தாராவும் இந்த வாரத்துடன் வெளியேறுகிறார்கள். இந்த முற்கட்ட படப்பிடிப்பு கடந்த 30-35 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் போடப்பட்ட செட்டில் அதற்கான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இயக்குநர் சிவா, அஜித்தும் நயன்தாராவும் பங்குபெற்ற இரண்டு பாடல் காட்சிகளை படமாக்கியுள்ளார். நடன இயக்குநர் பிருந்தா அந்தப் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். பாடலுக்கான மாண்டேஜ் காட்சிகளையும் எடுத்துள்ளனர். அஜித் இருவேடங்களில் நடித்துள்ள காட்சிகளும் அப்போது எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு மும்பையில் படப்பிடிப்பு நடைப்பெற போவதாக தெரிகிறது.