சினிமா

விஜய்யை இயக்குவேன்... ’சிறுத்தை’ சிவா நம்பிக்கை

விஜய்யை இயக்குவேன்... ’சிறுத்தை’ சிவா நம்பிக்கை

webteam

நடிகர் விஜய்யுடன் நல்ல நட்பு இருப்பதாகவும், விரைவில் அவரை வைத்து படம் இயக்குவேன் என்றும் விவேகம் படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா கூறியுள்ளார். 

விஜய் - அஜித் குறித்து பேசிய சிவா, ’அஜித், விஜய் இருவருமே தங்களது பலங்களை நன்கு அறிந்திருப்பவர்கள். இருவருமே அதிகம் பேசமாட்டார்கள். பெரிய நட்சத்திரங்களாக அவர்கள் இருப்பதற்கு இதுவும் முக்கியமான காரணம். நடிகர் விஜயை பலமுறை நேரில் சந்தித்துள்ளேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. விரைவில் அவரை இயக்குவேன். விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் வெற்றி ரகசியமே கடின உழைப்பு தான். விவேகம் படத்தைப் பொறுத்தவரை அஜித்தின் தன்னம்பிக்கையே மிகப்பெரிய பலம்’ என்றார். விவேகம் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் சிவா பிஸியாக இருக்கிறார். இண்டர்நேஷனல் ஏஜெண்டாக அஜித் நடித்துள்ள விவேகம் படம் ஆகஸ்டில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.