பிரபல பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகர் யேசுதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், கேரளாவில் வசித்துவரும் இவருக்கு வயதுமூப்பு காரணமாக திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும்,
ரத்த அணுக்கள் தொடர்பான சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டுவருவாதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இவரது மகன் விஜய் யேசுதாஸ் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில், விஜய் யேசுதாஸிடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த செய்திகளைப் பற்றி அறியாத அவர், "மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், யேசுதாஸ் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது குரலால் தடம் பதித்தவர். பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியும், பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளும் 8 முறை தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். இசை உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்துவரும் இவர் 80 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.