எஸ்.ஜானகி எக்ஸ் தளம்
சினிமா

எஸ்.ஜானகி பாடிய கடைசிப் பாடல்.. பூமியிலிருந்தும் விடைபெற்ற அவரது குரல்!

பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி காலமான நிலையில், அவர் பாடிய கடைசிப் பாடல் குறித்த செய்தியும் வைரலாகி வருகிறது.

Prakash J

தமிழ் சினிமாவில், பழங்காலம் தொட்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி எஸ்.ஜானகி, இன்று நம்முடன் இல்லை. அவர் இம்மண்ணைவிட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் நம்மை என்றும் உறங்காது வைத்திருக்கும். அவரது இழப்பு தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பற்றிய நினைவலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், அவர் பாடிய கடைசிப் பாடல் குறித்த செய்தியும் வைரலாகி வருகிறது.

அவர், இறுதியாக கடந்த 2016ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பத்து கல்பனகள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அம்மபூவினும்’ பாடலைப் பாடியதுடன் இனி பாடுவதில்லை என முடிவு செய்தார். அந்தப் பாடலோடு மட்டுமல்ல, இனி பூவுலகில் பாடுவதற்கு வாய்ப்பே இல்லை என முடிவுசெய்து ஒரேயடியாகக் குரலையே முடித்துக் கொண்டுவிட்டார். எனினும், அவரது குரலில் வெளிவந்த பாடல்கள் நமக்கு என்றும் அவரை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.