spb, s janaki x page
சினிமா

எஸ்.ஜானகிக்குப் பிடித்த SPB பாடிய பாட்டு.. அவர் குரல்போலவே பாடி அசத்திய தருணம்!

எஸ்.பி.பி.யுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ள அவர், எஸ்.பி.பி பாடியதில் தனக்கு பிடித்தது இந்த பாடல்தான் என்று மேடையிலேயே ஒருமுறை அவருக்கு முன்பாகக் கூறியதுடன், அதைப் பாடியும் அசத்தியிருந்தார்.

Prakash J

தமிழ் சினிமாவில், பழங்காலம் தொட்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி எஸ்.ஜானகி, இன்று நம்முடன் இல்லை. அவர் இம்மண்ணைவிட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் நம்மை என்றும் உறங்காது வைத்திருக்கும். அவரது இழப்பு தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பற்றிய நினைவலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அவருக்குப் பிடித்த பாட்டு ஒன்று உள்ளது.

எஸ்.பி.பி.யுடன் இணைந்து பல பாடல்களை பாடியுள்ள அவர், எஸ்.பி.பி பாடியதில் தனக்கு பிடித்தது இந்த பாடல்தான் என்று மேடையிலேயே ஒருமுறை அவருக்கு முன்பாகக் கூறியதுடன், அதைப் பாடியும் அசத்தியிருந்தார். அப்போது அவர், ”எஸ்.பி.பி பாடிய பாடல்களில் தனக்கு விருப்பமான பாடல் இதுதான். எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் எத்தனையோ இருக்கிறது. அதிலும், ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்தப் பாடல் முழு ரெக்கார்டிங்கின்போது நான் பக்கத்தில் உட்கார்ந்து கேட்டு மிகவும் ரசித்த பாட்டு. அது என்ன பாடல் என்றால் ‘பனி விழும் மலர் வனம்’பாடல். இந்தப் பாடல்தான் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு” என்று கூறிவிட்டு எஸ்.பி.பி குரலில் அந்த பாட்டை ஜானகி பாடி காட்டி அசத்தினார்.