தமிழ் சினிமாவில், பழங்காலம் தொட்டு பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி எஸ்.ஜானகி, இன்று நம்முடன் இல்லை. அவர் இம்மண்ணைவிட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் நம்மை என்றும் உறங்காது வைத்திருக்கும். அவரது இழப்பு தமிழ்த் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பற்றிய நினைவலைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், எஸ்.பி.பி.யின் ஆரம்பகால இசை வாழ்க்கையில், ஒருமுறை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் நடுவர் குழுவில் இருந்தவர் எஸ்.ஜானகி.
அந்தப் போட்டியில் எஸ்பிபி-க்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அதை ஏற்காத எஸ்.ஜானகி, ’இந்தப் பையன்தான் முதல் பரிசுக்கு தகுதியானவன் என்று சொல்லி எஸ்பிபி-க்கு முதல் பரிசு வழங்க வலியுறுத்தினார். கூடவே அவருக்கு சினிமாவில் பாடுவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளது என்று உற்சாகப்படுத்தினார். பின்னர், இருவரும் இணைந்து திரையுலகில் எண்ணற்ற பாடல்களைப் பாடினர்.