புகழ் பெற்ற பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது.
வெண்டிலேட்டர் உதவியுடன் லதா மங்கேஷ்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது
பாரத ரத்னா விருது பெற்ற 92 வயதான பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி 8 ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது ஐசியு பிரிவில் கோவிட் மற்றும் நிமோனியாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய சினிமாவின் சிறந்த பாடகிகளில் ஒருவராகக் கருதப்படும் லதா மங்கேஷ்கர், 1942 ஆம் ஆண்டு தனது 13வது வயதில் முதன்முதலாக பாடத் தொடங்கினார், அவர் இதுவரை பல இந்திய மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். பத்ம விபூஷண், பத்ம பூஷன், தாதாசாகேப் பால்கெ, சிறந்த பாடகிக்காக மூன்று தேசிய விருதுகள், 15 பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க விருதுகள், 7 பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.