சினிமா

காளை வளர்ப்பவர்களுடன் பீட்டா பேச வேண்டும்: சின்மயி யோசனை

காளை வளர்ப்பவர்களுடன் பீட்டா பேச வேண்டும்: சின்மயி யோசனை

webteam

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் காளை மாடுகள் வளர்ப்பவர்களுடன் கலந்து பேசி பீட்டா அமைப்பு ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் என பாடகி சின்மயி யோசனை தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் இந்தியா டுடே மாநாட்டில் பங்கேற்ற பின்னர் பாடகி சின்மயி இவ்வாறு கூறினார். மிருகவதைக்கு எதிராக பீட்டா அமைப்பு பல நல்ல விஷயங்களை செய்து வருகிறது என்று அவர் கூறினார். ஆனால் ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டு என்று கூறிய சின்மயி, இதில் பீட்டா அமைப்பு விவசாயிகளுடனும், காளை மாடுகளை வளர்ப்பவர்களுடனும் கலந்துரையாடி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

நாம் அனைவரும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும் என்ற அவர், ஆனாலும் நமது உரிமைக்கு எதிராக நீதிமன்றத்தின் தீர்ப்பு அமையுமேயானால் அதை தட்டி கேட்கும் உரிமையையும் சட்டம் நமக்கு வழங்கியுள்ளது என்றார்.