சினிமா

விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்

விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்

JustinDurai

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது நடிகர் விவேக்குக்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை என்று தெரிவித்துள்ளது சிம்ஸ் மருத்துவமனை. 

மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் காலமானார்.  

நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் ராஜூ சிவசாமி கூறுகையில், ''நடிகர் விவேக் நேற்று காலை 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது விவேக்குக்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை. உடல்நிலையை பரிசோதித்து உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. விவேக்கின் உடல்நிலை மோசமாக இருந்தது. விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.