சினிமா

த்ரிஷா, சிம்ரனுக்கு கடல் சாகசப் பயிற்சி!

த்ரிஷா, சிம்ரனுக்கு கடல் சாகசப் பயிற்சி!

webteam

ஆக்‌ஷன், அட்வெஞ்சர் படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா, சிம்ரன் ஆகியோருக்கு கடல் சாகசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

’96’, ‘பேட்ட’ படத்துக்குப் பிறகு த்ரிஷா, ஆக்‌ஷன் அட்வென்சர் படம் ஒன்றில் நடிக்கிறார். இதில் மற்றொரு ஹீரோயினாக சிம்ரன் நடிக்கிறார். ஜீவா, ஷாலினி பாண்டே நடிப்பில்  ‘கொரில்லா ’ படத்தை தயாரித்துள்ள ஆல் இன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.  சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ‘சதுரம் 2’ என்ற திரில்லர் படத்தை இயக்கியவர்.

படம் பற்றி தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பேசும்போது, “இந்தியாவில் முதன்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், ஆக்‌ஷன் காட்சிகளும் நிறைந்த படமாக இது தயாராகிறது. அத்துடன் ரசிகர்களுக்கு வேறு பல சுவராசியமான விசயங்களும் காத்திருக்கிறது. இதன் ஷூட்டிங் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது.

சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் படமாக்க திட்டமிட்டிருக்கிறோம். இதில் நடிக்க சிம்ரனுக்கும், த்ரிஷாவுக்கு கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இவர்களைத் தவிர மற்ற நடிகர்கள் ,நடிகையர்களின் தேர்வும், தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருகிறது” என்றார்.

இதனிடையே ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில், என்ற காமெடி படம் கோடையில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.