சுசீந்திரன் இயக்கத்தில் கிராமப்புற கதையில் சிம்பு நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
’வெண்ணிலா கபடிக்குழு’ திரைப்படம் மூலம் தமிழில் முதல் படத்தை துவக்கினார் இயக்குநர் சுசீந்திரன். அடுத்ததாக, நடிகர் கார்த்தியை வைத்து ‘நான் மகான் அல்ல’ விஷ்ணு விஷால் நடிப்பில் ‘ஜீவா’ என் ஹிட் படங்கள் கொடுத்து தமிழின் முன்னணி இயக்குநர் ஆனார்.
தற்போது, தனது இயக்கத்தில் கிராமப்புற கதையில் சிம்புவை நடிக்க சுசீந்திரன் அணுகியதாகவும், கதை சிம்புவுக்கு பிடித்துப்போய் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால், சிம்பு சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தை முடித்துக்கொடுத்தப் பின்னரே சுசீந்திரன் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.