சினிமா

டப்பிங் தொடங்கியாச்சு... அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் சிம்பு..!

டப்பிங் தொடங்கியாச்சு... அடுத்தடுத்து அப்டேட் கொடுக்கும் சிம்பு..!

webteam

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ’மாநாடு’ அரசியல் கதைக்களம் கொண்டது என்பதால் அதிக கூட்டத்தைக் கூட்டி காட்சியமைப்புகளை எடுக்கவேண்டும். இதற்கு தாமதமாகும் என்பதால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பை தள்ளிப்போட்டதாக கூறப்பட்டது

இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியை உபயோகமாக மாற்ற நினைத்த சிம்பு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். கிராமப்புற கதைக்களம் கொண்ட, இப்படத்தின்  ஷூட்டிங் திண்டுக்கல்லில் தொடங்கியது. இடையே சில போட்டோக்கள் வெளியான நிலையில் ஷூட்டிங் முடிந்துவிட்டது என்றது படக்குழு. 35 நாட்கள் படப்பிடிப்பு எனக் கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பும் முடிவடைந்தது.

இந்நிலையில் இன்று ஈஸ்வரன் படத்துக்கு டப்பிங் வேலையை தொடங்கியுள்ளார் சிம்பு. அது தொடர்பான புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். பரபரப்பாக பட வேலைகள் நடைபெற்று வருவதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி உள்ளனர்.