தனது 100 வது பாடலை பாடி முடித்துள்ளார் நடிகர் சிம்பு.
சினிமாவில் நடிப்பதை போலவே பாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருபவர் சிம்பு. தனது பாடங்களில் பாடுவதை போலவே அவர் பிற படங்களிலும் பாடி வருகிறார். தனது பாடல் பயணத்தை அவர் மோனிஷா என் மோனலிஷா படத்தின் மூலம் தொடங்கினார். அன்று தொடங்கிய இந்த இசைப் பயணம் என் ஆளோட செருப்ப காணோம் படத்தில் பாடியதன் மூலம் 100வது எண்ணிக்கையை நிறைவு செய்துள்ளது.
அதை பற்றி பேசிய சிம்பு, "பாடல்களை பாட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட ஆர்வம். அந்த ஆர்வம் என் தந்தையிடமிருந்து எனக்கு வந்தது. பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்களை நான் பாடியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை 100 பாடல்களை பாடியிருக்கிறேன் என்பதை நான் உணரவே இல்லை. நான் எப்போதுமே கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவன். எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருப்பது இசையில் எனக்கு பரந்த புரிதலை கொடுத்திருக்கிறது. எந்த அவதாரத்தில் நான் இருந்தாலும் என்னை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. என்னை பொறுத்த வரையில் 100 என்பது சாதாரண ஒரு நம்பர்தான். ஆனாலும் இந்த நேரத்தில் பெருமையாக உணர்கிறேன். சினிமா என்பது என் வாழ்க்கை மற்றும் உயிரோடு கலந்த ஒன்று. எனக்கான தனி ஒரு இடத்தை அடைய மிகவும் கடுமையாக உழைப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.