சினிமா

சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் சிம்பு: காதல், ஆக்சன், காமெடி கலந்த படம்

webteam

சிம்புவை கதாநாயகனாக வைத்து புதிய படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். மாதவ் மீடியாவின் ஐந்தாவது தயாரிப்பாக சென்டிமெண்ட், காதல், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தும் ரசனைகளுடன் படம் உருவாகிவருகிறது. இது பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சிம்புவுக்குப் பொருந்தும் வகையில் திரைக்கதையை வடிவமைத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். ஒரே கட்டமாக படத்தை முடிக்கும் திட்டத்தில் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட பின்னர் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்திவருகின்றனர்.

இந்தப் படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால் ஆகியோர் சிம்புவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி என பிரபலமான தொழில்நுட்பக் குழுவினரும் கைகோர்த்துள்ளனர். 2021 ம் ஆண்டு படத்தை வெளியிடும் முயற்சியில் படக்குழு இரவு பகலாக பணியாற்றிவருகிறது.