சினிமா

ஓவியாவிற்காக சிம்பு இசையமைத்த நான்கு பாடல்கள்

ஓவியாவிற்காக சிம்பு இசையமைத்த நான்கு பாடல்கள்

webteam

நடிகை ஓவியா நடிக்க உள்ள திரைப்படத்திற்காக சிம்பு நான்கு பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்தப் படத்தின்  படப்பிடிப்பு மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை ஓவியா ‘90எம்எல்’படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அனிதா உதீப் இயக்க உள்ளார். இப்படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார். தனது படப்பிடிப்புக்கு நடுவில் ஓவியா படத்தின் பாடல்களை சிம்பு கம்போஸ் செய்து வருவதாக தெரிகிறது. இதன் ‘காதல் கடிக்குது’ பாடலின் சிறு வீடியோ ஒன்று வெள்ளிக்கிழமை வெளியானது. மிக ரொமான்டிக் பாடலாக அது உருவாகி இருந்தது. விரைவில் அப்பாடல் வெளியாகும் என்று விடியோவில் சிம்பு கூறியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று சமூக வலைத்தளத்தில் பரவிய இந்த வீடியோ, அவரது ரசிகர்களால் தீவிரமாகப் பரப்பப்பட்டது.

இது குறித்து சிம்புவின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்த நடிகர் ஒருவர் தகவல் தந்துள்ளார். “சிம்பு இந்தப் படத்தின் நான்கு பாடல்களை இதுவரை இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்பாடல், முழுமையான வடிவம் இல்லை. அது ஸ்க்ராட்ச் வடிவம்தான். இந்தப் பாடலை சிம்புவே பாடவுள்ளார்” என்று கூறியுள்ளார்.