ட்விட்டர் பக்கத்தில் சிம்புவின் ‘தொட்ரா’ ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சிம்புவின் அடுத்த படத்தின் தலைப்பா? அல்லது சிங்கிளா? என்ன என்று தெரியவில்லை. ஆனால் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி அதற்கான விடை கிடைக்கும் என்ற அறிவிப்போடு சமூக வலைதளத்தில் சிம்புவின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. அதற்கு ‘தொட்ரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. அதை வைத்து ட்விட்டரில் ‘திக்குதிக்கு’, ‘பக்குபக்கு’ ஹேஷ்டேக்குகளும் இடப்பட்டு வருகிறது. இதனை நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி வெளியிட்டுள்ளார். இவரின் படத்தலைப்புதான் ‘தொட்ரா’. இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை ஏற்கெனவே நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டு வாழ்த்தியும் இருந்தார். ஆகவே அது சம்பந்தமான அறிவுப்பு ஒன்று வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.