தூத்துக்குடி மாசடைந்ததற்கும் சமூக விரோதிகளே காரணம் என சொல்வார்கள் என நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் பார்வையிட்ட ரஜினி, போராட்டத்தில் வன்முறை ஏற்பட சமூக விரோதிகள், விஷக் கிருமிகளே காரணம் என்று கூறியிருந்தார். மேலும் ஜெயலலிதா போல் இரும்புக் கரம் கொண்டு சமூக விரோதிகளை அடக்க வேண்டும் என்று ரஜினி காட்டமாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நடிகர் சித்தார்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இத்தனை வருடங்களாக தூத்துக்குடி மாசடைந்ததற்கும், சமூக விரோதிகளே காரணம் என சொல்வார்கள் என்று கூறியுள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்த நிலையில் சித்தார்த் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.