சினிமா

சினிமாவில் நடிக்கிறார் சித்தராமையா

சினிமாவில் நடிக்கிறார் சித்தராமையா

webteam

குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இருமொழித் திரைப்படமான “சம்மர் ஹாலிடேஸ்”-இல் நடிக்க இருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.

”விடுமுறை நாட்களில் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். குழந்தைகளின் மகிழ்ச்சி என்னவாக இருக்கிறது என்பதைச் சொல்லும் படத்தில்தான் சித்தராமையா நடிக்கிறார்” என படத்தின் இயக்குநர் கவிதா லங்கேஷ் தெரிவித்துள்ளார். ”விருதுகள் மற்றும் மானியங்களுக்காக மட்டுமே குழந்தைகளை மையப்படுத்திய திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆனால், அபூர்வமாக குழந்தைகளுக்கான சில நல்ல திரைப்படங்களும் வெளியாகின்றன. அந்த வகையில், இந்தப் படமும், குழந்தைகளுக்கான விஷயங்களையும் உணர்வுகளையும் பிரதிபலிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் பிரகாஷ்ராஜ், சுமன் போன்றவர்களும் நடிக்கிறார்கள். இந்தப் படம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது.

இயக்குநர் கவிதா, கன்னடத் திரைப்படங்களுக்கான விருதுக் குழுவின் நடுவர்களில் ஒருவர். இவரது படங்கள், சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் விருதுகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.