சினிமா

சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நடித்துள்ள 'முடக்கறுத்தான்'

JustinDurai
சித்த மருத்துவர் வீரபாபு முடக்கறுத்தான் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சித்த மருத்துவர் வீரபாபு. இவர் தற்போது முடக்கறுத்தான் என்ற திரைப்படத்தை இயக்கி, நாயகனாக நடித்திருக்கிறார். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய வீரபாபு, இந்தப் படம் குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்களை பற்றியது என கூறினார். இந்தப் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் இசையமைப்பாளர் சிற்பியும், பாடலாசிரியர் பழநி பாரதியும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.