பாலிவுட் நடிகை ஸ்வேதா திரிபதி தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.
சரவணன் இயக்க உள்ள புதிய காதல் மற்றும் தீவிரமான ரொமான்ஸ் கதையில் ஸ்வேதா திரிபதி நடிக்கிறார். சரவணன் இதற்கு முன் பாலுமகேந்திரா மற்றும் கமல்ஹாசன் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். இவர் இயக்க இருக்கும் படத்தின் திரைக் கதையை ராஜூ முருகன் எழுதியுள்ளார்.
படம் பற்றி சரவணன் கூறுகையில், எங்கள் கதைக்கு ஸ்வேதா பொறுத்தமாக இருந்தார். அவர் நடித்துள்ள சில காதல் படங்களை பார்த்தேன். அதில் அவரது நடிப்பு அபாரமாக இருந்தது. அதன் பிறகு அவரது மேனேஜரை தேடிப் பிடித்தேன். அவருக்கு எனது படக் கதை சுருக்கத்தை கடிதத்தில் கூறினேன். மீண்டும் மும்பையில் சந்தித்து கதையை விவரித்தேன். என் கதையை கேட்டு அவர் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார். எங்கள் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் ஆரம்பமாக உள்ளது. அடுத்து மஹாராஷ்டிராவுக்கு போகிறோம். வித்தியாசமான காட்சி பின்புலம் கதைக்கு தேவைப்படுகிறது. நவம்பர் 27 ல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
ஸ்வேதா பாலிவுட்டில் 2009ல் நடிக்க தொடங்கினார். சுஜாதா, மானசா, தி ட்ரிப் என சில படங்களில் நடித்துள்ளார். இவர் அலகாபாத்தில் பிறந்தவர். உதவி இயக்குநர், மாடல், தொலைக்காட்சி தொடர் நடிகை என பலமுகங்களைக் கொண்டவர்.