சினிமா

ஸ்ருதியை தேடி வந்த காதலர்: திருமணத்துக்கு கமல் சம்மதம்

ஸ்ருதியை தேடி வந்த காதலர்: திருமணத்துக்கு கமல் சம்மதம்

webteam

நடிகை ஸ்ருதிஹாசனும் அவரது பிரிட்டிஸ் காதலரும் திருமணம் செய்துகொள்ள நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டீஸ் நாடக நடிகருமான மைக்கேல் கோர்சேலும் காதலித்துவருவதாக கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து நேற்று மும்பை வந்த மைக்கேலை ஸ்ருதி வரவேற்று காரில் அழைத்துச் சென்றார். இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்ட காட்சியை மும்பை மீடியா படம் பிடித்துள்ளது. 
இதுபற்றி மும்பை சினிமா வட்டாரத்தில், ‘மைக்கேல் கோர்சேல் அடுத்த திங்கள்கிழமை வரை இங்குதான் இருக்கிறார். இருவரும் கமலை ஏற்கனவே சந்தித்து திருமணம் பற்றி பேசிவிட்டனர்’ என்று கூறப்படுகிறது.  ஸ்ருதி தரப்பில் கூறும்போது, ’இருவரும் இங்கிருப்பது உண்மைதான். ஆனால், திருமணத் தகவலில் உண்மையில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.