சினிமா

காதலருடன் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்

காதலருடன் மீண்டும் இணைந்த ஸ்ருதிஹாசன்

webteam

நீண்ட இடைவெளிக்குப் பிறகு காதலருடன் மீண்டும் இணைந்ததாக, நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டீஸ் நாடக நடிகர் மைக்கேல் கோர்சேலும் காதலித்து வருகின்றனர். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், லண்டனில் இருந்து மும்பை வந்த மைக்கேலை ஸ்ருதிஹாசன் வரவேற்று காரில் அழைத்துச் சென்றார். இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்ட காட்சியை மும்பை மீடியா படம் பிடித்து வெளியிட்டது.

இதுபற்றி மும்பை சினிமா வட்டாரத்தில், ‘மைக்கேல் கோர்சேல் ஒரு வாரம் இங்குதான் இருக்கிறார். இருவரும் கமலை ஏற்கனவே சந்தித்து திருமணம் பற்றி பேசிவிட்டனர்’ என்று கூறப்பட்டது. ஆனால், திருமணத் தகவலில் உண்மை இல்லை என்று ஸ்ருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகர் ஆதவ் கண்ணதாசன் திருமணத்தில் ஸ்ருதிஹாசன், தனது காதலரை வேஷ்டி, சட்டையில் அழைத்து வந்திருந்தார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் லண்டன் சென்றுவிட்டார் மைக்கேல்.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ஸ்ருதி ஹாசன், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மைக்கேலை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் அங்கு செலவழித்துள்ளனர். காதலருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ஸ்ருதி ஹாசன், ’’நீ, என்னை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறாய். இந்த உலகத்தில் முக்கியமான விஷயம் இது’’ என்று அதற்கு கீழே குறிப்பிட்டுள்ளார்.

அதோடு reunited,' 'driving around' and 'my lovely man' என்ற ஹேஷ்டேக்குகளையும் இணைத்துள்ளார். இருவரும் இருக்கும் பல புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.