சினிமா

’’அதுவொரு வேடிக்கையான அனுபவம்’’ .... மலைப்பகுதி சாலையில் லாரி ஓட்டிய ஸ்ருதி ஹாசன்

webteam

உத்தரகாண்ட் மலைப்பகுதியில் யாத்ரா என்ற டிஜிட்டல் படத்திற்காக லாரி ஓட்டிய அனுபவத்தை வேடிக்கையானது என்று நடிகை ஸ்ருதிஹாசன் குறிப்பிட்டுள்ளார், ஊரடங்கு நாட்களில் சமூகவலைதளங்களில் கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் லாரி ஓட்டிய அனுபவத்தை சுவையாக எழுதியுள்ளார்.

“நான் பெரிய டிரைவர் இல்லை என்பது ரொம்பப் பேருக்குத் தெரியாது” என்று கூறியுள்ள ஸ்ருதி, “எனக்கு ஸ்டன்ட் கலைஞர்கள் துணையாக இருந்தனர். எனக்கு அருகிலேயே ஒருவர் உட்கார்ந்து கிளட்ச் மற்றும் கியர் போட உதவினார்.  உண்மையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். இது எளிதான வேலை கிடையாது. இது வேடிக்கையானதும்கூட. உத்தரகாண்ட் மலைப்பகுதி சாலையில் லாரி ஓட்டுவது மிகப்பெரிய டாஸ்க்” என்றும் பதிவிட்டுள்ளார்.  

தனக்கு மூக்கில் நடத்தப்பட்ட சர்ஜரி பற்றி ஒருமுறை சமூகவலைதளத்தில் எழுதினார். பின்னர் மக்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கவலைப்பட்டார். மேலும், இதுதான் மக்களின் முக்கியமான பிரச்னையாக இந்தக் காலத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தற்போது எஸ்பி ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள அவர், தெலுங்கில் ரவிதேஜாவுடன் கிராக் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே, கேங்ஸ்டோரி என்ற பிரெஞ்சு படத்தின் ரீமேக்கான  யாத்ரா என்ற டிஜிட்டல் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்திற்காக மலைப்பகுதியில் லாரி ஓட்டிய அனுபவத்தைத்தான் ஸ்ருதிஹாசன் பகிர்ந்துள்ளார்.