சினிமா

ஸ்ருதி தேடி சந்தித்த ஹீரோ!

ஸ்ருதி தேடி சந்தித்த ஹீரோ!

Rasus

கான் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ள நடிகை ஸ்ருதிஹாசன், அங்கு அவரது பேவரைட் ஹீரோவை சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

கான் திரைப்பட விழாவில் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கலந்துகொள்ள அங்கு சென்றுள்ள ஸ்ருதிஹாசன் அங்கு, அவருக்குப் பிடித்த எழுத்தாளரான நீல் கைமேனை சந்தித்து பேசியுள்ளார். நீல் எழுதிய சிறுகதையைத் தழுவி, ‘ஹவ் டு டாக் டு கேர்ள்ஸ் அட் பார்ட்டிஸ்’ என்ற ஆங்கில படம் உருவாகியுள்ளது. இதன் பிரிமீயரில் கலந்துகொண்ட ஸ்ருதி, அங்கு நீல் கைமேனை சந்தித்துள்ளார்.

இதுபற்றி ஸ்ருதி தரப்பில் கூறும்போது, ‘நீல் கைமேன் ஸ்ருதியின் பேவரைட் எழுத்தாளர். அவர் எழுத்தை விரும்பிப் படிப்பார். இதையடுத்து டிவிட்டரில் அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தார். இந்நிலையில் கான் பட விழாவில் அவரைச் சந்தித்து பேசியுள்ளார்’ என்றனர்.

அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஸ்ருதி, அதை இன்ஸ்டாகிராமில் பதிந்து, நீல் கைமேனை இன்னொரு ஹீரோ என்று புகழ்ந்துள்ளார்.