சினிமா

மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் ஸ்ரேயா கோஷல் சிலை

மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் ஸ்ரேயா கோஷல் சிலை

Rasus

டெல்லியில் அமைய இருக்கும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் மெழுகு சிலை நிறுவப்பட இருக்கிறது.

உலக பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைத்து கவுரவிப்பது, மேடம் டூசாட்ஸ் அருங்காட்சியகத்தின் வழக்கம். லண்டனில் உள்ள இந்த அருங்காட்சியம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. மெர்லின் என்டர்டெயின்மென்ட்ஸின் இந்த அருங்காட்சியம் லண்டன் தவிர, நியுயார்க், சான் ஃபிரான்ஸிஸ்கோ, சீனா, சிங்கப்பூர் உட்பட பல்வேறு நாடுகளில் அமைந்துள்ளன.

இந்தியாவில், டெல்லியில் வரும் ஜூன் மாதம் இந்த மியூசியம் திறக்கப்பட இருக்கிறது. இதில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் மெழுகு சிலையும் நிறுவப்பட இருக்கிறது. இதுபற்றி ஸ்ரேயா கோஷல் கூறும்போது, ’இந்த மியூசியத்தில் எனது சிலையும் இடம்பெறுவது திரில்லிங்காக இருக்கிறது. பல்வேறு சாதனையாளர்களுடன் எனது சிலையும் இருப்பது பெருமைக்குரிய விஷயம்’ என்றார்.