சினிமா

எனக்கு கூச்ச சுபாவம்: ’மெலடி குயின்’ வெட்கம்!

எனக்கு கூச்ச சுபாவம்: ’மெலடி குயின்’ வெட்கம்!

webteam

தமிழில், ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ‘முன்பே வா அன்பே வா’, ’வெயில்’ படத்தில் ’உருகுதே மருகுதே’ ’மைனா’வில் ’நீயும் நானும்’, ’எந்திரன்’-ல் ’காதல் அணுக்கள்’, ’ஐ’-ல், ’பூக்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள்’, ’றெக்க’ படத்தில், ‘கண்ணக் காட்டு போதும்’ உட்பட ஏராளமான பாடல்களை பாடியிருப்பவர், மெலடி குயின் ஸ்ரேயா கோஷல்.

இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் பாடிவரும் இவர், இந்தியில் 2002-ல் வெளியான ’தேவதாஸ்’ படம் மூலம் பாடகியாக அறிமுகமானார். சினிமாவுக்கு வந்து 15 வருடம் ஆனதையொட்டி இப்போது ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறார் ஸ்ரேயா.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘சினிமாவில் பாடுவதை தாண்டி என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஏற்கனவே ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். அது கஜல் ஆல்பம். இப்போது கிளாசிக்கல் இசை அதிகம் இல்லாமல் ஆல்பம் உருவாக்கியிருக்கிறேன். மியூசிக் வீடியோவில் நடித்ததில்லையே என்று கேட்கிறார்கள். நான் கூச்ச சுபாவம் உடையவள். அதனால் தலைகாட்டாமல் இருந்தேன். இப்போது வெளியிட்டிருக்கிற ஆல்பத்தில் நடிக்க வேண்டும் என்று எல்லோரும் வற்புறுத்தியதால் இதில் நடித்திருக்கிறேன். நடிப்பு கஷ்டமான வேலைதான்’ என்றார்.