உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறினார்.
கன்னடத்தில் யு டர்ன்’ படத்தில் அறிமுகமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் மணிரத்னம் இயக்கிய ’காற்று வெளியிடை’, கண்ணன் இயக்கிய ‘இவன் தந்திரன்’, புஷ்கர்- காயத்ரி இயக்கிய ’விக்ரம் வேதா’, நிவின் பாலி நடித்த ’ரிச்சி’ ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். அடுத்து, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ’விக்ரம் வேதா-வுக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இருந்தாலும் வருகிற எல்லா கதைகளிலும் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லை. சிறந்த கதைகளில், கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். விஷாலுடன் நடித்துள்ள இரும்புத்திரை படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இது த்ரில்லர் படம். நானே எனது படங்களில் டப்பிங் பேச இருக்கிறேன். அடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க இருக்கிறேன். படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும். இப்போது தெலுங்கில் நடித்துவருகிறேன்’ என்றார்.