ஷில்பா ஷெட்டி web
சினிமா

”உங்கள பார்க்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு..”! தமிழில் பேசி அசத்திய ஷில்பா ஷெட்டி!

பிரபுதேவா உடன் மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தில் நடித்தபோது தமிழ் கற்றுக்கொண்டதாகவும், தமிழ் பேசுவது நன்றாக புரியும் என்றும் ஷில்பா ஷெட்டி தெரிவித்தார்.

Rishan Vengai

கன்னட நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் பான்-இந்தியா படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘KD The Devil'. 1970 காலகட்டத்தில் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியிக்கும் இப்படத்தில், சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர்.

ஷில்பா ஷெட்டி

தமிழ், கன்னடா, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சஞ்சய் தத் மற்றும் ஷில்பா ஷெட்டி இருவரும் தமிழ் நடிகர்கள் குறித்தும், தமிழ் சினிமா குறித்தும் பகிர்ந்துகொண்டனர்.

தமிழில் பேசி அசத்திய ஷில்பா ஷெட்டி..

சென்னையில் நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ஷில்பா ஷெட்டி, “எல்லாருக்கும் வணக்கம். எனக்கு தமிழ் புரிஞ்சது, நான் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தபோது கத்துக்கிட்டன். தமிழ் பேசுறது நல்லா புரியும், அந்தளவுக்கு பேச வராது. ஆனால் ஒன்னு மட்டும் சொல்லனும், உங்கள பார்க்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்துல எல்லா எமோசனும் இருக்கு, தமிழ் ரசிகர்களுக்கும், சென்னை ஆடியன்ஷுக்கும் படம் புடிக்கும்” என்று தமிழில் பேசி அசத்தினார்.

மேலும் எப்படி இப்பவும் இளைமையாகவே இருக்கிறீர்கள் என்ற தொகுப்பாளினியின் கேள்விக்கு பதிலளித்த அவர், யோகா தான் காரணம். யோகா பண்ணுங்க, ஆனால் அதற்கு அப்புறம் பீட்ஷா, பர்க்கர்னு சாப்பிடாதீங்க என்று கலகலப்பாக பேசினார்.